.webp)
தேவையான சந்தர்ப்பத்தில் அணிக்காக ஓட்டங்களை குவித்து தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தமையை எண்ணி தாம் மகிழ்ச்சியடைவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மென்டிஸ் தெரிவித்தார்.
சரித் அசலங்கவின் தலைமைத்துவத்தையும் அவர் பாராட்டினார்.
பங்களாதேஷூக்கு எதிரான 03 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.
கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று(08) நடைபெற்ற தொடரின் மூன்றாவதும் இறுதியுமான தீர்மானமிகு போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 07 விக்கட்டுக்களை இழந்து 285 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இன்னிங்ஸில் குசல் மென்டிஸ் 124 எனும் அதிகூடிய ஓட்டங்களை பதிவு செய்தார்.
286 எனும் வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 186 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.