போலந்தின் வௌிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை..

போலந்தின் வௌிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை..

by Staff Writer 28-05-2025 | 5:26 PM

போலந்து நாட்டின் வௌிவிவகார அமைச்சர் Radosław Sikorski 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(28) காலை நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

வௌிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உள்ளிட்ட தரப்பினரால் அவர் கட்டுநாயக்க  விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டார்.

போலந்து வௌிவிவகார அமைச்சர் இன்று(28) பிற்பகல் அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது போலந்து வெளியுறவு அமைச்சர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகள் சிலருடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.