.webp)
Colombo (News1st) வெலிக்கடை சிறைச்சாலையின் கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருளை சிறைச்சாலைக்குள் கொண்டுவருவதற்கு முற்பட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த போதைப்பொருளை உறுதியாக அடையாளம் காண்பதற்கும் அதன் எடையை மதிப்பிடுவதற்குமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி திசாநாயக்க தெரிவித்தார்.