.webp)
Colombo (News1st) உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டார மட்டத்தில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பெயர்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் அச்சீட்டுப் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் சில நாட்களுக்குள் இந்த வர்த்தமானி வௌியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
இதுவரை சமர்ப்பிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்கள் இந்த வர்த்தமானியில் உள்ளடக்கப்படும் என அவர் கூறினார்.
பெண் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களினதும் பெயர் பட்டியல் இதுவரை கிடைக்கவில்லை எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்தார்.
பெயர்ப்பட்டியல் கிடைத்த பின்னர் மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பெயர்களை வௌியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டார்.