.webp)
கிளிநொச்சி - கணேசபுரம் பகுதியில் வாய்க்காலில் இருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜெயந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் 37 வயதான தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியதில் வாய்க்காலுக்குள் வீழ்ந்ததில் மரணம் சம்பவித்திருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.