.webp)
நாட்டிலுள்ள அரச நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்களை அண்மித்த பகுதிகளில் நுளம்பு குடம்பிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாக அரச பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்தது.
நிர்வாகத்தினரின் அலட்சியத்தால் நுளம்பு குடம்பிகள் பெருகும் நிலைமை அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன தெரிவித்தார்.
அரச, தனியார் நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்களை அண்மித்து டெங்கு நுளம்பு குடம்பிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளமை பூச்சியல் விஞ்ஞான அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.