S.J.B ஹொரவ்பொத்தானை தொகுதி அமைப்பாளர் இராஜினாமா

ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரவ்பொத்தானை தொகுதி அமைப்பாளர் இராஜினாமா

by Staff Writer 25-05-2025 | 3:35 PM

ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரவ்பொத்தானை தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அனுர புத்திக இராஜினாமா செய்துள்ளார்.

தமது இராஜினாமா கடிதத்தை கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் நேற்று(24) கையளித்ததாக அவர் தெரிவித்தார்.

அமைப்பாளர் என்ற வகையில் தமது கடமைகளை முன்னெடுக்கும் போது கட்சியினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு இணங்க முடியாதென அனுர புத்திக்க தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தொடர்ந்தும் தொகுதி அமைப்பாளர் பதவியில் தம்மால் நீடிக்க முடியாதெனவும் அவர் கூறியுள்ளார்.