.webp)
Colombo (News1st) மியன்மாரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நிவாரண குழுவை இலங்கையிலிருந்து அனுப்ப தயாராகவுள்ளதாக இராணுவம் தெரிவிக்கின்றது.
மியன்மாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அதனை நிறைவேற்றுவதற்கு தயாராகவுள்ளதாக இராணுவப் பேச்சாாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்தார்.
மியன்மாருக்கு அனுப்பப்படவுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கை அந்த நாட்டின் கோரிக்கை பிரகாரம் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே மியன்மாருக்கு வைத்தியக் குழுவை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.