.webp)
Colombo (News 1st) ஜனாதிபதி நிதியத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 22 பேர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம்(CID) நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் B அறிக்கையை சமர்ப்பித்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியவர்களுள் பிரபல அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் உள்ளடங்குவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.