.webp)
Colombo (News 1st) எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்கான விசேட போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலதிகமாக 500 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ஜீவக பிரசன்ன தெரிவித்தார்.
பண்டிகைக் கால விசேட போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் 20ஆம் திகதி வரை இடம்பெறும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேநேரம், எதிர்வரும் 10ஆம் திகதி முதல் மேலதிகமாக 40 ரயில்களை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பதுளை, பெலியத்த, திருகோணமலை, அனுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குறித்த ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.