4 மாவட்டங்களின் வாக்குச்சீட்டு அச்சிடும் பணி நிறைவ

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ; 4 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் பணி நிறைவு

by Staff Writer 02-04-2025 | 4:36 PM

Colombo (News 1st)  உள்ளூராட்சி மன்றத் ​தேர்தலின் வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான வாக்குச்சீட்டுகள் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் பிரதீப் புஸ்பகுமார தெரிவித்தார்.

அத்துடன் 9 மாவட்டங்களுக்கான தபால்மூல வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.