காசா-பொது மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவுறுத்தல்

காசாவிலிருந்து பொது மக்களை வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் அறிவுறுத்தல்

by Staff Writer 01-04-2025 | 12:14 PM

Colombo (News1st) தெற்கு காசாவிலுள்ள பொதுமக்களை வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் உத்தரவிட்டுள்ளது.

ரஃபா மற்றும் கான் யூனிஸின் சில பகுதிகளிலுள்ள பொதுமக்களை உடனடியாக அல்-மவாசி மனிதாபிமான வலயத்திற்குச் செல்லுமாறு இஸ்ரேலிய இராணுவம் அறிவுறுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

குறித்தப் பகுதிகளில் ஹமாஸுக்கு எதிராக கடுமையான தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவம் நடத்த தயாராகி வருவதை சுட்டிக்காட்டுவதாக இந்த அறிவுறுத்தல் அமைந்துள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே அண்மையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட   2 மாத போர் நிறுத்தத்தின் போது ரஃபாவிலுள்ள தங்கள் வீடுகளுக்கு பாரியளவான மக்கள் சென்றிருந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் மீண்டும் அங்கிருந்து வௌியேற ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.