.webp)
Colombo (News1st) சீன நிறுவனமொன்றுக்கு சொந்தமான TikTok செயலியை விற்பனை செய்வதற்கு இணங்கினால் சீனா மீது விதிக்கப்பட்ட வரிகளை குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
TikTok செயலியை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றால் அதன் மீது விதிக்கப்பட்ட தடையை அமுல்படுத்துவதற்கான காலத்தை மேலும் நீடிப்பற்கு எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக TikTok செயலி மீது விதிக்கப்பட்ட தடையை அமுல்படுத்துவதை எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் தீர்மானித்திருந்தார்.