தேர்தலில் வாக்களிக்க பிரஜாவுரிமை கட்டாயம் - ட்ரம்ப

தேர்தலில் வாக்களிக்க பிரஜாவுரிமை கட்டாயம் - டொனால்ட் ட்ரம்ப்

by Staff Writer 26-03-2025 | 5:46 PM

Colombo (News1st) வாக்களிப்பதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையொப்பமிட்டார்.

ஜனாதிபதி ட்ரம்பின் இந்த உத்தரவினால் மில்லியன்கணக்கான மக்கள் தமது வாக்குரிமையை இழக்க நேரிட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.

சட்டரீதியான குடியுரிமையை கொண்டிராதவர்கள் தேர்தல்களில் வாக்களிப்பதை இல்லாமல் செய்யும் வகையிலான சட்டமூலத்திற்கு பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சி உறுப்பினர்களால் கடந்த வருடம் அனுமதியளிக்கப்பட்டது.

எனினும் அப்போது அதிகாரத்தில் இருந்த ஜனநாயகக் கட்சியினர் இந்த சட்டமூலத்திற்கு செனட் சபையில் அனுமதியளிக்கவில்லை.

எவ்வாறாயினும் 146 மில்லியன் அமெரிக்கர்களுக்கு தமது பிரஜாவுரிமையை உறுதிப்படுத்தக்கூடிய கடவுச்சீட்டுகள் இல்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ட்ரம்பின் புதிய உத்தரவிற்கமைய வௌிநாட்டினர் அமெரிக்க தேர்தலில் பங்களிக்கும் நிலை அற்றுப்போயுள்ளது.