.webp)
Colombo (News 1st) உலகப் புகழ்பெற்ற ஒஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டொல்பி கலையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.
97ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் 23 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.
அமெரிக்காவின் பிரபல நகைச்சுவை நடிகர் கொனன் ஓ பிரையன் விழாவை தொகுத்து வழங்கினார்.
அரியானா கிரான்டே, சின்தியா எரிவோவின் பாடலுடன் விருது வழங்கும் விழா ஆரம்பமானது.
சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதை Adrien Brody
தன்வசப்படுத்தினார்.
த புரூட்டலிஸ்ட் திரைப்படுத்திற்காக இந்த விருது கிடைத்தது.
2024 ஆம் ஆண்டு திரையிடப்பட்ட அனோரா திரைப்படத்திற்கும் பல விருதுகள் கிடைத்தன.
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகை்கான விருதுகளை இந்தத் திரைப்படம் கைப்பற்றியது.
அனோரா திரைப்படத்தை ஷோன் பேகர் இயக்கியிருந்தார்.
மயிக்கி மெடிசன் சிறந்த நடிகையாக தெரிவானார்.
சிறந்த துணை நடிகராக A Real Pain திரைப்படத்தில் நடித்த கீரன் கல்கின் விருதுவென்றார்.
சோய் சல்டானா நிறந்த துணை நடிகையாக ஒஸ்கார் விருது வென்றார்.