இந்திய வானிலை ஆய்வு மைய்யத்தின் அறிவுறுத்தல்

இந்திய வானிலை ஆய்வு மைய்யத்தின் முக்கிய அறிவுறுத்தல்

by Staff Writer 18-05-2025 | 11:47 AM

இன்று(18) முதல் எதிர்வரும் 21 ஆம்  திகதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமென மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 45 முதல் 50 km வேகத்திலும்  இடைக்கிடையே 55 km வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடுமென இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபுக் கடற்பிராந்தியத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் சாத்தியமுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகுமெனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் இன்று(18)  முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று(18) கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பலத்த மழைபெய்யுமென இந்திய வானிலை ஆய்வு மையம் எதிர்வுக்கூறியுள்ளது