மதுபான சாலைகள், இறைச்சி கடைகளை மூடுமாறு அறிவிப்பு

பெப்ரவரி 4 ஆம் திகதி மதுபான சாலைகள், இறைச்சி கடைகளை மூடுமாறு அறிவிப்பு

by Bella Dalima 02-02-2022 | 3:19 PM
Colombo (News 1st) 74 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் காரணமாக எதிர்வரும் 04 ஆம் திகதி அனைத்து மதுபான சாலைகள் மற்றும் இறைச்சி கடைகளை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் N.H.M. சித்ரானந்தவினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 74 ஆவது சுதந்திர தின நிகழ்வை விசேட அம்சமாகக் கருதி, இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.