பஸ் கட்டணத்தை குறைக்க தீர்மானம்

பஸ் கட்டணத்தை குறைக்க தீர்மானம்

by Staff Writer 01-07-2025 | 10:10 PM

Colombo (News 1st) எதிர்வரும் 04ஆம் திகதி நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0.55 வீதத்தால் பஸ் கட்டணம் குறைக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வருடாந்த பஸ் கட்டண திருத்தங்களுக்கு அமைய 2.5 வீதத்தால் பஸ் கட்டணத்தை குறைப்பதற்கு இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் நேற்று(30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பஸ் கட்டணத்தை குறைப்பதற்கான வீதம் மறுசீரமைக்கப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

புதிய திருத்தங்களுக்கு அமைய ஆரம்ப கட்டணத்தில் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.