.webp)
-561644.jpg)
Colombo (News 1st) நேற்று(17) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லாஃப்ஸ் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் நடைபெற்ற சந்திப்பை அடுத்து விலையை குறைப்பதற்கான அறிவித்தலை லாஃப்ஸ் நிறுவனம் வௌியிட்டுள்ளது.
விலை திருத்தத்திற்கு அமைய 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 745 ரூபாவாலும் (புதிய விலை 5,995 ரூபா)
05 கிலோகிராம் சிலிண்டரின் விலை 322 ரூபாவாலும் (புதிய விலை 2,398 ரூபா) குறைக்கப்பட்டுள்ளது.
