எரிபொருள் விலை அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பு

by Staff Writer 01-10-2026 | 12:50 PM

Colombo (News 1st) இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று(30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 414 ரூபாவாகும்.

சுப்பர் டீசல் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 528 ரூபாவாகும்.

382 ரூபாவாகக் காணப்பட்ட ஒட்டோ டீசல் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. (புதிய விலை 392 ரூபா)

எனினும், 475 ரூபாவாகக் காணப்படும் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் விலையில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை.