பாண் விலை அதிகரிப்பு

பாண் விலை 10 ரூபாவினால் அதிகரிப்பு

by Staff Writer 31-08-2026 | 6:48 PM

COLOMBO (News 1st) இன்று(31) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், 450 கிராம் நிறையுடைய பாண் இறாத்தலின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அகில இலங்கை பேக்கரி உரிமையளர்கள் சங்க தலைவர் இதனை தெரிவித்தார்.

நுகர்வோர் அசௌரியங்களுக்கு உள்ளாகாத வகையில் ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை அதிகரிகரிக்குமாறு பேக்கரி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் அண்மையில் கோதுமை மா விலையை அதிகரித்ததையடுத்து பாண் விலை உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.