.webp)
-560545.jpg)
COLOMBO (News 1st) இலங்கையின் நீண்ட கால கடன் தரப்படுத்தல் மட்டத்தை, CCC+ மட்டத்திலிருந்து B- நிலையான மட்டம் வரை Fitch Ratings கடன் தரப்படுத்தல் நிறுவனம் உயர்த்தியுள்ளது.
அத்துடன், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை நிலையானது எனவும் Fitch Ratings நிறுவனம் அறிவித்துள்ளது.
வெளிநாட்டு நிதியியல் அபாயங்களை குறைத்து, பொருளாதார அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் வகையில் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் பேரண்ட பொருளாதார ஸ்திரப்படுத்தல் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியமையே இதற்கான காரணம் என Fitch Ratings நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், நாட்டின் நாணய மற்றும் வௌிப்புற சமநிலைகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு படிப்படியாக மீள கட்டமைக்கப்பட்டமையும் காரணமாகும் என Fitch Ratings கடன் தரப்படுத்தல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியான நிதி ஒழுக்கம் மற்றும் அரசாங்க வருமானத்தை திரட்டலை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் என்பன நீடித்த முதன்மை வரவு செலவுத் திட்ட உபரிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்துடன், இது நாட்டின் கடன் சுமையை குறைப்பதுடன், வெளிப்புற சமநிலையற்ற தன்மை மீண்டும் ஏற்படுவதற்கான அபாயத்தையும் குறைக்கும் என Fitch Ratings சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், இலங்கை தொடர்ந்து பல சவால்களை எதிர்கொண்டு வருவதாக Fitch Ratings நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடன் மறுசீரமைப்பு மற்றும் பேரண்ட பொருளாதார மறுசீரமைப்புகளுக்கு பின்னரும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும் போது, கடன் அளவுகள் மற்றும் கடன் பொறுப்புகள் காணப்படும் தரப்படுத்தலில் உள்ளடக்கப்பட்டுள்ள ஏனைய நாடுகளை விடவும் கணிசமாக உயர்வே காணப்படுதாகவும் Fitch Ratings கடன் தரப்படுத்தல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 05 வருடங்களில் வெளிநாட்டு கடன் பொறுப்புகள் அதிகரிக்கவுள்ள நிலையில், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஒப்பீட்டளவில் கடனை செலுத்தக்கூடிய மட்டத்திலேயே காணப்படுதவாக Fitch Ratings கடன் தரப்படுத்தல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
