.webp)
-561543.jpg)
COLOMBO (News 1st) எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கருகில் 2 பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 112 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விபத்தின் போது பல ரயில் பெட்டிகள் தடம்புரண்டுள்ளதாக எகிப்தின் அரச ரயில்வே அதிகார சபை தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளின் சிதைவுகளை அகற்றி, ரயில் சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, விபத்து தொடர்பில் விரைவான விசாரணையை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அப்துல் ஃபத்தா அல்-சிசி உத்தரவிட்டுள்ளார்.
