.webp)
-561500.jpg)
COLOMBO (News 1st) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 09ஆம் திகதி திங்கட்கிழமை வட மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படுவதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.
இந்த விசேட விடுமுறைக்குப் பதிலாக எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை பதில் பாடசாலை நடத்தப்படுமெனவும் அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் வடக்கு மாகாணத்திலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் நவம்பர் 9ஆம் திகதி வழமைபோன்று இயங்கும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு ஊவா, மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்களின் தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 09ஆம் திகதி திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக நேற்று (06) அறிவிக்கப்பட்டது.
இதற்கு மாற்று தினமாக எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை, கல்வி நடவடிக்கைளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
