.webp)
-561506.jpg)
COLOMBO (News 1st) 22 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம், அம்பாறை, களுத்துறை, கேகாலை, கிளிநொச்சி, குருநாகல், கொழும்பு, கம்பஹா, காலி, நுவரெலியா, புத்தளம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பதுளை, மட்டக்களப்பு, மன்னார், கண்டி, மாத்தறை, முல்லைத்தீவு, மொனராகலை, இரத்தினபுரி, வவுனியா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடி, மின்னல் தாக்கங்களிலிருந்து ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டு கொண்டுள்ளது.
இதனிடையே மேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே 100 மில்லிமீற்றர் அளவிலான பலத்த மழைப்பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு, கிழக்கு, மற்றும் ஊவா மாணங்களிலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழைப்பெய்யக்கூடும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
