தித்திக்கும் தீபத்திருநாள்

தித்திக்கும் தீபத்திருநாள்

by Staff Writer 08-11-2026 | 7:34 AM

Colombo (News 1st) உலக வாழ் இந்துப் பெருமக்களால் கொண்டாடப்படும் தீபாவளி தினம் இன்றாகும்.

காத்தல் கடவுளான மகாவிஷ்ணு அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காக யுகங்கள் தோறும் அவதார புருஷராக பூமியில் ஜனித்ததாக வரலாறு கூறுகின்றது.

துவாபரயுகத்தில் கொடுங்கோலோச்சிய கம்சன், நரகாசுரன் உள்ளிட்ட அசுரர்களை வதம் செய்வதற்காக பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமன் ஆயர்குடியில் கிருஷ்ணராய் அவதரித்தார்.

பாண்டவர்களின் தோழராய் பார்த்திபனின் சாரதியாய் குருசேத்திரத்தில் மகாபாரதப் போரை வழிநடத்திய கண்ணபிரான் அன்று தர்மத்தை நிலைநாட்டினார்.

வரங்கள் பல பெற்று மக்களை துன்புறுத்திய நரகாசுரனையும் கிருஷ்ண பரமாத்மா சம்ஹாரம் செய்து மக்களுக்கு வாழ்வளித்தார்.

நரகாசுரனுக்கு அஞ்ஞானம் அகன்று மெய்ஞ்ஞானம் கைகூடியதை நினைவுகூரும் நோக்கில் தீபத்திருநாளன்று இல்லங்களும் கோவில்களும் அகல்விளக்குகளால் அலங்கரிக்கப்படுகின்றன.

ஏனைய செய்திகள்