இறுதி போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி

முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி

by Staff Writer 26-10-2026 | 8:16 AM

COLOMBO (News 1st) முக்கோணஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிராக நேற்று (25) நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டினால் வெற்றிபெற்றுள்ளது. 

லாஹூரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி   46.4   ஓவர்களில் சகல விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

242 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 47.1 ஓவர்களில் 09 விக்கெட்டுக்களை இழந்து 243 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. 

இந்த தொடரில் இலங்கை, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.