.webp)

Colombo (News 1st) இலங்கை அணியுடனான முதலாவது T20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 119 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்தின் சவுத்ஹெம்டனில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 254 ஓட்டங்களை பெற்றது.
அணித்தலைவர் Harry Brook ஆட்டமிழக்காமல் சதம் கடந்து 114 ஓட்டங்களையும் Jos Buttler 80 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு வலுசேர்த்தனர்.
பந்துவீச்சில் துஷ்மந்த சமிர, துனித் வெல்லாலகே, ஏஷான் மாலிங்க, வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 19 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 135 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
அணி சார்பில் துனித் வெல்லாலகே 33 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
