.webp)
-560557.jpg)
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் வழக்கில் குற்றவாளிகளான 15 பேருக்கும் விதிக்கப்படும் தண்டனையை மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்றிரவு(22) அறிவித்தது.
வழக்கின் எட்டாவது பிரதிவாதியான குற்றவாளிக்கு 260 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
4 குற்றவாளிகளுக்கு தலா 240 வருடங்கள் வீதம் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 5 குற்றவாளிகளுக்கு தலா 220 வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்த நீதிபதிகள் குழாம் எஞ்சிய 5 குற்றவாளிகளுக்கும் தலா 200 வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது.
இன்று முதல் குற்றவாளிகளின் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் அரசுடைமையாக்குவதாகவும் நீதிபதிகள் குழாம் அறிவித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு சதித் திட்டம் தீட்டியமை, உதவியமை மற்றும் அனுசரணை வழங்கியமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் 15 பேர் குற்றவாளிகளாக காணப்பட்டுள்ளதுடன் 09 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
மேல் நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஷ்ஷங்க ஆகியோர் அங்கம் வகிக்கும் மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்தது.
