.webp)
-560537.jpg)
COLOMBO (News 1st) கிரிஉல்ல பகுதியில் கட்டளையை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலுக்கமைய, அந்த காரை நிறுத்துமாறு பொலிஸாரால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் சமிக்ஞையை மீறி குறித்த கார் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது அந்த காரை பின்தொடர்ந்து அதன் டயருக்கு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
இதன்போது காரிலிருந்த 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாகனத்தின் கதவுகளை திறக்கப்படாததால் காரின் கதவை உடைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, குறித்த வாகனத்திலிருந்து சுமார் 5 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
37 வயதுடைய ஆண், 38 மற்றும் 16 வயதுடைய 2 பெண்களுமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
