.webp)

COLOMBO (News 1st) : நிலவும் மழையுடனான வானிலையினால் 06 மாவட்டங்களிலுள்ள 13 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் வௌியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கேகாலை மாவட்டத்தின் மாவனெல்லை, தெரணியகலை, அரநாயக்க, எட்டியாந்தோட்டை, மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும்,
நுவரெலியா மாவட்டத்தின், கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு, நோர்வூட் மற்றும் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவுக்கும், காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலாளர் பிரிவுக்கும் களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்கும் மண்சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் மற்றும் 2ஆம் கட்ட மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
