38 பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் நிறுத்தம்

சீரற்ற வானிலையினால் 38 பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் நிறுத்தம்

by Staff Writer 21-09-2026 | 12:06 PM

COLOMBO (News 1st) நிலவும் சீரற்ற வானிலை நிலைமையினால் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பு மாகாண கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்றைய தினம் மாத்திரம் நாடு முழுவதும் 38 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

மத்திய மாகாணத்தில் 35 பாடசாலைகளும், சப்ரகமுவ, தென் மற்றும் மேல் மாகாணங்களில் தலா ஒவ்வொரு பாடசாலைகள் உள்ளடங்கலாக 38 பாடசாலைகளில் இன்று (21) கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை மாகாண கல்வி அதிகாரிகள் கல்வியமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.