வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தாய்லாந்து பயணம்

வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தாய்லாந்து பயணம்

by Staff Writer 14-09-2026 | 6:03 AM

COLOMBO (News 1st) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வௌிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் இன்று (14) தாய்லாந்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
தாய்லாந்தின் தொழிலாளர் அமைச்சரின் அழைப்பின் பேரில் அவர் இன்று (14) முதல் 16 வரை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வப் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது அமைச்சர் விஜித்த ஹேரத் தொழிலாளர் அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் தாய்லாந்தின்  அலுவல்களுக்கான பதிற்கடமை அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.
பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் முன்னேற்றுவது குறித்து  இந்த விஜயத்தின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
தொழிலாளர் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தாய்லாந்தில் இலங்கை தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் ஆகியவற்றின் மூலம் இரு தரப்பினரும் தொழிலாளர் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவுள்ளனர். 
சுற்றுலாத்துறை மற்றும் வேலைவாய்ப்பு, புலம்பெயர்வு மற்றும் தொழிலாளர் நடமாட்டம் ஆகியவற்றில் நடைமுறைசார் ஒத்துழைப்பை முன்னெடுப்பதற்கும், மக்களிடையேயான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும், இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு ரீதியிலான பொருளாதார ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கும் இந்த விஜயத்தின் எதிர்பார்ப்பாகும்