டெங்கு ஒழிப்பு : SIT திட்டம் வெற்றி

டெங்கு குடம்பிகளை ஒழிக்கும் நவீன SIT வேலைத்திட்டம்

by Staff Writer 30-08-2026 | 2:36 PM

Colombo (News 1st) டெங்கு குடம்பிகளை ஒழிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.


அதன் முன்னோடி திட்டத்தின் முதல் 2 கட்டங்கள் வெற்றிகரமாக அமைந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பதில் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்தார்.


உலக நாடுகள் சிலவற்றில் செயற்படுத்தப்பட்டுள்ள இந்த SIT எனப்படும் வேலைத்திட்டமானது, சுகாதார அமைச்சின் கீழ் களனி பல்கலைக்கழகத்தின் பங்களிப்புடன் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.


டெங்கு குடம்பிகளை சில பரிசோதனைகளுக்குட்படுத்துவதன் மூலம் அவற்றை இனப்பெருக்கம் செய்ய முடியாமல் தடுக்கும் வேலைத்திட்டமே இதுவாகும் என அவர் கூறினார்.


இதனூடாக குறித்த டெங்கு குடம்பிகளால் தமது அடுத்த தலைமுறையை உருவாக்க முடியாமல்போகும் என அவர் விளக்கமளித்தார்.


டெங்கு நோய் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் இந்த வேலைத்திட்டத்தின் 3ஆம் கட்டத்தை செயற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அந்த வேலைத்திட்டமும் வெற்றியளிக்கும் என எதிர்பார்ப்பதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பதில் பணிப்பாளர் கபில கன்னங்கர மேலும் தெரிவித்தார்.