போகம்பரை சிறைக்கு அடுத்த வாரம் கைதிகள் மாற்றம்

புனரமைக்கப்பட்ட போகம்பரை சிறைச்சாலைக்கு அடுத்த வாரம் கைதிகள் மாற்றம்

by Staff Writer 15-08-2026 | 11:26 AM

Colombo (News 1st) புனரமைக்கப்பட்ட போகம்பரை சிறைச்சாலைக்கு அடுத்த வாரம் கைதிகள் மாற்றப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

போகம்பரை சிறைச்சாலையின் புனரமைப்பு பணிகள் தற்போது இறுதிக் கட்டத்திலுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.

பழைய போகம்பரை சிறைச்சாலையை, மீண்டும் ஒரு சிறைச்சாலையாக அறிவித்து கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால்அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.