கடும் மழையுடனான வானிலையால் 6 பேர் பலி

மழையுடனான வானிலை : 7 மாவட்டங்களில் 6,152 பேர் பாதிப்பு

by Staff Writer 04-08-2026 | 10:27 AM

Colombo (News 1st) கடும் மழையுடனான வானிலையால் 1,512 குடும்பங்களைச் சேர்ந்த 6,152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

7 மாவட்டங்களில் 47 பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள மக்கள், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மழையுடனான வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார்.

பாதிக்கப்பட்ட 3,316 பேர், 16 பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.