சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு

அமெரிக்க - ஈரான் மோதலால் உச்சம் தொடும் மசகு எண்ணெய் விலை

by Staff Writer 22-07-2026 | 1:44 PM

Colombo (News 1st) அமெரிக்கா - ஈரானுக்கு இடையிலான பிராந்தியப் பதற்றங்கள் மற்றும் விநியோகத் தடைகள் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்தும் அதிகரித்து செல்கின்றது.

கடந்த ஒரு மாதத்துடன் ஒப்பிடுகையில் மசகு எண்ணெய் விலை சுமார் 16.61 வீதம் வரை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ஒரு பீப்பாய் ப்ரெண்ட் மசகு எண்ணெய் நேற்று (22) 92 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன் அமெரிக்காவின் WTI மசகு எண்ணெய் 85 அமெரிக்க டொலருக்கு விற்பனையாகியுள்ளது. 

அமெரிக்கப் படைகள் தெற்கு மற்றும் மேற்கு ஈரானிலுள்ள இலக்குகளைத் தாக்கியதை அடுத்து பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டானிலுள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்யுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை கடந்த 5 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.