வங்கிக்கணக்கு விபரங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு

வங்கிக் கணக்கு விபரங்களை சமர்ப்பிக்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

by Staff Writer 27-04-2026 | 2:52 PM

Colombo (News 1st) மீனவர்கள் தமது பயன்பாட்டிலுள்ள வங்கிக் கணக்கு விபரங்களை உடனடியாக கடற்றொழில் பரிசோதகரிடம் சமர்ப்பிக்குமாறு கடற்றொழில் பிரதியமைச்சர் ரத்ன கமகே அறிவுறுத்தியுள்ளார்.

எரிபொருள் மானியம் பெற்றுக்கொள்வதற்காக சில மீனவர்கள் வழங்கிய வங்கிக் கணக்குகள் தற்போது செயற்பாட்டில் இல்லை என பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தத்தமது முழுப்பெயர் மற்றும் பயன்பாட்டிலுள்ள வங்கி கணக்கிலக்கம், வங்கியின் பெயர் மற்றும் கிளை ஆகிய விபரங்களை கடற்றொழில் பரிசோதகரிடம் கையளிக்குமாறு பிரதியமைச்சர் அறிவுறுத்தினார்.

மே மாதத்திற்குள் நாட்டிலுள்ள அனைத்து மீனவ சமூகத்தினருக்குமான எரிபொருள் மானியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கடற்றொழில் பிரதியமைச்சர் ரத்ன கமகே மேலும் கூறினார்.

ஏனைய செய்திகள்