பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது!

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது!

by Staff Writer 27-04-2026 | 12:49 PM

Colombo (News 1st) யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸாரினால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் அவர் இன்று காலை வாக்குமூலம் வழங்கிய பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். பெரியவிளான் பகுதியிலுள்ள காணியொன்றை சுத்தம் செய்யும் பணிகளுக்காக அந்த பகுதிக்கு நேற்று(26) காலை சென்றிருந்த போது பெண்ணொருவருடன் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் கூறினர். இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினரை நோக்கி குறித்த பெண் கல்வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளார். சம்பவம் தொடர்புடைய பெண் நேற்று கைது செய்யப்பட்டார். இளவாலை பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அரச்சுனா வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டிருந்தார். வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர்   அவரை கைது செய்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. இராமநாதன் அர்ச்சுனாவின் கைத்துப்பாக்கி பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்