.webp)

Colombo (News 1st) போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளையும் 07 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
19 முதல் 28 வயதிற்கு உட்பட்ட பிக்குகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் அம்பாறை, ஹொரணை, பொரலஸ்கமுவ, வாதுவை, வரக்காபொல, பிலியந்தைல, ஹோமாகம, அத்துரலிய, அம்பலாங்கொடை, உடிஸ்பத்துவ, மடபாத மற்றும் பலாங்கொடை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலின் அடிப்படையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான குஷ் மற்றும் ஹசிஷ் போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பயணப்பொதிகளில் பாடசாலை உபகரணங்கள் மற்றும் இனிப்பு பண்டங்களுடன் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களில் மூவர் இதற்கு முன்னரும் பேங்கொக்கிற்கு சென்றிருந்தமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
