.webp)

Colombo (News 1st) 'சமாதான தீவில் - சமாதான பாதயாத்திரை' காரணமாக கொழும்பு நகரை மையப்படுத்தி நாளை(28) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமாதான பாதயாத்திரையின் நிறைவு விழா நாளை(28) பிற்பகல் 04 மணிக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இதன் காரணமாக நாளை(28) காலை 11 மணி முதல் கீழ் குறிப்பிட்ட வீதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பண்டாரநாயக்க சுற்றுவட்டம் முதல் பேஸ்லைன் வீதி ஊடாக பொரளை சந்தி வரை, மருதானை வீதி, நந்ததாச கோதாகொட மாவத்தை, வோட் பிளேஸ், சொய்சா சுற்றுவட்டம், லிப்டன் சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை, F.R.சேனநாயக்க மாவத்தை, C.W.W.கன்னங்கர மாவத்தை, ஹோர்டன் சுற்றுவட்டம், நந்தா மோட்டார்ஸ் சந்தி,
சுதந்திர மாவத்தை, பிரேமசிறி கேமதாச மாவத்தை, கேம்பிரிட்ஜ் பிளேஸ், கிளாஸ் ஹவுஸ், மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தை, நூலக சந்தி, Flower Road, பித்தளை சந்தி, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, முத்தையா வீதி, பிரேபுரூக் வீதி, ஸ்டெபல் வீதி, கங்காராம விகாரையை சூழவுள்ள வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
குறித்த காலப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக முடிந்தவரை மாற்றுவழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
