ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி நியமனம்

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமனம்

by Staff Writer 16-02-2026 | 8:03 PM

Colombo (News 1st) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் புதிய பணிக்குழாம் பிரதானியாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர உத்தியோகத்தரான பிரபாத் சந்திரகீர்த்தி அமைச்சின் செயலாளர், தொழிலாளர் ஆணையாளர் நாயகம், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ஆகிய பதவிகளை போன்று நிர்வாக சேவையில் பல்வேறு நடவடிக்கையிலும் பாராளுமன்றத்தின் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்ட அனுபவத்தை கொண்டுள்ளார்.

இந்த புதிய நியமனத்தின் மூலம் ஜனாதிபதி செயலகத்தின் நிர்வாகப் பணிகள் மற்றும் கொள்கை ரீதியான செயற்பாடுகள் வினைத்திறன் மிக்கதாக மாறுமென எதிர்பார்க்கப்படுகிறது.