.webp)
-553864.jpg)
Colombo (News 1st) களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை மற்றும் நில்தண்டஹின்ன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாத்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
