கொலையில் முடிந்த வாய்த்தர்க்கம் : இருவர் கைது

கொலையில் முடிந்த வாய்த்தர்க்கம் : இருவர் கைது

by Staff Writer 16-02-2026 | 10:56 PM

Colombo (News 1st) யாழ்ப்பாணம் - கோப்பாய் மத்தி பகுதியில் இடம்பெற்ற காணி பிரச்சினையின் போது நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் இன்று(16) கைது செய்யப்பட்டுள்ளனர்.

காணியொன்றை பார்வையிடுவதற்காக குறித்த நபர் சென்றிருந்த வேளையில் அந்த இடத்திற்கு மேலும் மூவர் வருகை தந்துள்ளனர்.

இதன்போது நால்வருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாகவும் 59 வயதான நபரை ஏனைய மூவரும் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தப்பிச்சென்ற மற்றொருவரை கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.