.webp)

Colombo (News 1st) இந்த வருடத்தின் பெப்ரவரி மாதம் வரையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்களின் அங்கீகாரம் 65 வீதமாக அதிகரித்துள்ளதாக Verite Research நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மதிப்பீடு கடந்த வருடம் 62 வீதமாக காணப்பட்டதாக நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் மற்றும் குற்றங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் கடந்த கால அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய அரசாங்கம் மக்களின் அதிக அங்கீகாரத்தை பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஊழலை குறைப்பது தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீதும் மக்களின் திருப்தியான மனநிலை அதிகரித்துள்ளது.
நாட்டு மக்களில் பெரும்பாலானோர், அதாவது 59 வீதமானோர் நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் திருப்தியடையந்துள்ளதாக Verite Research நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போதைய பொருளாதார நிலைமைகளால் பொதுமக்களின் திருப்தி, வரலாற்றில் 50 வீதத்தை கடந்த முதல் சந்தர்ப்பம் இதுவென Verite Research நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
