.webp)

COLOMBO(News1st) - தலங்கம - அக்குரேகொட துப்பாக்கிப் பிரயோகம் கரந்தெனிய சுத்தா எனப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுப்படும் நபரினால் வழிநடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக பொலிஸ் மாஅதிபரின் உத்தரவிற்கமைய 10 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு, பயங்கரவாத விசாரணைப் பிரிவு உள்ளிட்ட 10 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தலங்கம - அக்குரேகொட பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடி கட்டடத் தொகுதியின் வாகன தரிப்பிடத்தில் நேற்று (13) மாலை இடம்பெற்ற இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 45 வயதான சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது 42 வயதான மனைவி ஆகியோர் உயிரிழந்தனர்.
காரில் பயணித்த இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதற்கு T56 ரக துப்பாக்கியும், கைத் துப்பாக்கியும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். நீதவான் விசாரணைகளை தொடர்ந்து சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
