.webp)
-553570.jpg)
Colombo (News 1st) உலகில் இசைத்துறையின் மிகவும் கௌரவமான விருதாகக் கருதப்படும் 68ஆவது கிரம்மி விருது விழா(Grammy Awards) இன்று(02) பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் Arena அரங்கில் விருது வழங்கும் விழா இடம்பெற்றது.
இசை உலகின் நவீன போக்குகளின் கீழ் 02 புதிய விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், இந்த ஆண்டு 95 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
பிரபல நகைச்சுவை நடிகர் ட்ரெவர் நோவா 06ஆவது தடவையாக இந்த விழாவை தொகுத்து வழங்கினார்.
Wildflower பாடலுக்காக Billie Eilish 2025ஆம் ஆண்டின் சிறந்த பாடலுக்கான விருதை வென்றார்.
சிறந்த பாப் குரல் ஆல்பத்திற்கான விருதை Lady Gaga பெற்றுக்கொண்டார்.
09 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட அமெரிக்க ரெப்பர் Kendrick Lamar, இந்த ஆண்டு கிரம்மி விருதுகளில் மிகவும் கவனத்தை ஈர்த்தார்.
05 விருதுகளுடன் கிரம்மி வரலாற்றில் அதிகம் பரிந்துரைக்கப்பட்ட ஹிப்-ஹாப் கலைஞராக அவர் பதிவாகியுள்ளார்.
சிறந்த ரெப் பாடல், சிறந்த ரெப் ஆல்பம், சிறந்த ரெப் குரல் நிகழ்ச்சி, சிறந்த ராப் நிகழ்ச்சி மற்றும் ஆண்டின் சிறந்த பதிவு ஆகிய பிரிவுகளில் அவர் விருதுகளை வென்றார்.
புதிய யுகக் கலைஞருக்கான 2025 கிரம்மி விருதை பிரித்தானிய பாடகி ஒலிவியா டீன் பெற்றுக்கொண்டார்.
திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா best audio book, narration and storytelling recording-இற்கான விருதுகளை வென்றார்.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வரும் இந்த விருது விழாவில் அவர் சார்பாக இசைக்கலைஞர் ரூஃபஸ் வைன்ரைட் இந்த விருதை பெற்றார்.
உலக புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இந்த ஆண்டு முதல் முறையாக கிரம்மி விருதை வென்றார்.
அவர் தயாரித்த Music for John Williams திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
இதேவேளை, 79 வயதான ஸ்பீல்பெர்க், எம்மி, கிரம்மி, ஒஸ்கார் மற்றும் டோனி ஆகிய அனைத்து EGOT விருதுகளையும் வென்ற உலகின் 22ஆவது கலைஞராக பதிவானார்.
தென் கொரியாவின் KPop Demon Hunters உருவாக்கிய "Golden" பாடல், சிறந்த காட்சி ஊடக பாடலுக்கான விருதை வென்றது.
கிரம்மி விருதை வென்ற முதல் Pop பாடலாக இது வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
இந்த ஆண்டு கிரம்மி விருதுகளில் இந்தியக் கலைஞர்களும் பரிந்துரைக்கப்பட்டனர்.
பிரபல சித்தார்த் கலைஞர் அனுஷ்கா சங்கர், 'Daybreak' பாடல் மற்றும் 'Chapter III: We Return to Light' ஆல்பத்திற்காக பரிந்துரைக்கப்பட்டார்.
இந்தியாவின் சங்கர் மகாதேவன் மற்றும் ஸாகிர் உசேன் தலைமையிலான 'சக்தி' இசைக்குழு, 'Mind Explosion' நேரலை ஆல்பத்திற்காக 02 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
