.webp)

Colombo (News 1st) அஹங்கம பெலஸ்ஸ பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பகுதியில் ஹோட்டல் நிர்மாணப் பணியின் போது இன்று(22) மதியம் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த மூவர் போனங்கஹஹேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை, அனுராதபுரம் மற்றும் மாத்தறை பகுதிகளை சேர்ந்த மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
