.webp)
-823973-553228.jpg)
Colombo (News1st) 61 கிலோ 838 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிட்டம்புவ - பின்னகொல்லவத்த அரலிய ஒழுங்கையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த போதைப்பொருட்களின் சந்தை பெறுமதி சுமார் 900 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர், திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும், போதைப்பொருள் கடத்தல்காரருமான தற்போது வௌிநாட்டில் தங்கியுள்ள துபாய் வருண மற்றும் குடு சித்திக் ஆகியோருக்கு நெருக்கமானவரென பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, 56 கிராம் ஹெரோயினுடன் காரில் பயணித்த ஒருவர் கடவத்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
