.webp)

Colombo (News1st) புதிதாக 5 அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அதற்கமைய நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற நேர்முகப் பரீட்சையின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சோசலிச மக்கள் முன்னணி, மக்கள் பங்கேற்பு ஜனநாயக முன்னணி, மலையக அரசியல் அரங்கம், சமத்துவ கட்சி, புரட்சிகர மக்கள் சக்தி ஆகிய 5 அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாகும்.
